நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி -முதல்வர்

நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், இப்புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு ரூ.16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு3,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ‘நிவர்’புயல் காரணமாக 302 குடிசை வீடுகள் முழுமையாகவும்
1,439 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.