திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை மாகாதீபம் ஏற்றப்பட்டது. மேலும் அண்ணாமலையார், அர்த்தநாரீஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு அபிஷேகம், பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

  கொரோன பரவல் காரணமாக பக்த்தர்கள் அனுமதிக்கப்படாததால் திருவண்ணாமலை வெறிச்சோடி காணப்படுகிறது.

இன்று மாலை 6 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சி மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் நிலையில் இந்த ஆண்டு 500 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தீபத்தை ஏற்றிய பின்பு ஊர் பொதுமக்கள் மட்டும் வீட்டிலிருந்தபடியே தீபத்தை தரிசனம் செய்தனர்.