Physical activity: இளையதலைமுறையினர் தினமும் ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்- டி.ஜி.பி.

The-younger-generation-needs-to-exercise.
டி.ஜி.பி. சைலேந்திரபாபு

Physical activity: தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை உடற்பயிற்சிக்காக சென்னையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அவர் பூந்தமல்லி, ஸ்ரீபெருமந்தூர் வழியாக இருங்காட்டுக்கோட்டைக்கு சென்று அங்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.

பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மீண்டும் இருங்காட்டுக் கோட்டையில் இருந்து திருமழிசை, வெள்ளவேடு, அரண்வாயில் வழியாக மணவாளநகர் வழியாக வந்து திரும்பி மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார்.

இதையும் படிங்க: DMK suspend MLA: திமுக எம்.எல்.ஏ.,கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்

அப்போது புதுச்சத்திரம் அருகே சாலையோரம் இருந்த கடையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கரும்பு ஜூஸ் வாங்கி குடித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு காவல்துறை சைக்கிள் வீரர்களுடன் ஞாயிற்று கிழமைகளில் 100 கிலோமீட்டர் தொலைவிற்கு சைக்கிளிங் செய்து வருகிறேன். உடற்பயிற்சி செய்வதன் மூலம் அலுவலகப் பணிகளை கடுமையாக மேற்கொள்ள முடியும். எனவே 4 மணி நேரம் சைக்கிளிங் செய்வது, அடுத்த 12 மணி நேரத்திற்கு கடுமையாக உழைப்பதற்கு உபயோகமாக இருக்கும்.

சாலையோரங்களில் உள்ள கரும்பு உள்ளிட்ட இயற்கை உணவுகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை ஆகும். தற்போது இளைய தலைமுறையினர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செய்தித்தாள் வாசிப்பது உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பிற்காலத்தில் காவல்துறையில் பயிற்சி மேற்கொள்ள உபயோகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: Minor girl died: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி உயிரிழப்பு