போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முடியும் வரை போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனையேற்று போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தொமுச நிர்வாகி நடராஜன், ‘போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து அமைச்சர் தன்னிச்சையாக முடிவெடுத்ததால், திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த உள்ளதாக’ தெரிவித்தார்.