பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா தற்போது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.
இந்தநிலையில் டெல்லிக்குள் நுழைய 5 மாநில மக்களுக்கு டெல்லி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 மாநில மக்கள் டெல்லிக்குள் நுழைய கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இந்த சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சான்றிதழ் இல்லாமல் வரும் இந்த 5 மாநில மக்களும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடு வருகிற 26-ந்தேதி முதல் மார்ச் 15-ந் தேதி வரை தொடரும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. 5 மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் டெல்லி அரசு இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.



