ஆந்திராவில் ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு !

Andhra pradesh govt
ரூ.50 லட்சம் நிவாரணம் ஆந்திர அரசு அறிவிப்பு

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்,பள்ளி வகுப்புகள் எல்லாம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

தற்போது ஆந்திராவில் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.மேலும் வரும் 12-ம்தேதி முதல், அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் தொடங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அறிவித்துள்ளார்.

வரும் 12-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். புதிய கல்வி திட்டத்தை கண்டிப்பாக அமல் படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பதற்கு முன்பு பள்ளிகளில் கூடுதல் அறைகள், கழிவறைகள், தண்ணீர் வசதி போன்றவற்றை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.