தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் !

tn-news-schools-and-colleges-holiday-in-kanyakumari
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன.மாணவர்களின் நலன் கருதி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில்,தனியார் பள்ளிகள் அனைத்தும் முழுமையான கல்வி கட்டணத்தை கடந்த ஆண்டு பெற்றோர்களிடம் பெறுவதற்கு வலியுறுத்தியது. இது தொடர்பாக பெற்றோர்களின் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் தற்போது வரை திறப்பது பற்றிய முடிவு எடுக்கப்படவில்லை.

மேலும் முழு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலும், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்னதாக 40% கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளிகள் திறந்த 2 மாதத்திற்குள் 35% கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.