பாடத்திட்டங்கள் 50 சதவீதமாக குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு

மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படாது இருக்கும் வகையில் இந்த ஒரு முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத ஒரு நிலை உள்ளது ஏற்கனவே 1 முதல் 9-ம் வகுப்பு வரை 40 சதவீதம் அளவிற்கு பாடத்திட்டமும் 10,11,12 ம் வகுப்புகளுக்கு சில பாட பகுதிகள் மட்டும் குறைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது பள்ளிகள் திறப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளதால் 40 சதவீதத்திலிருந்து பாடத்திட்டங்களை 50 சதவீதமாக குறைப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.