வாலிபர் இதயத் துடிப்பை மீட்ட நர்ஸ்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அடுத்த கருவாக்குறிச்சி காலனி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் வசந்த் (20). இவர், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு கல்வி பயின்று வருகிறார்.

அப்போது மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கும் கோட்டூர் தோட்டத்தை சேர்ந்த வனஜா (39) என்பவர் பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி நோக்கி தனது பைக்கில் வந்தார்.

சாலையில் வாலிபர் ஒருவர் அடிபட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை செவிலியர் வனஜா பரிசோதித்தார். அதில் வாலிபரின் இதய துடிப்பு குறைந்து அபாய கட்டத்தில் இருப்பதை கண்டு, அவரின் நெஞ்சு பகுதியை பலமாக அழுத்தி முதலுதவி கொடுத்ததில் வாலிபருக்கு இதய துடிப்பு சீரானது.

இதன் பின்னர், அவர் 108 ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு மன்னார்குடி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேற் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சை பார்த்த செவிலியருக்கு சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைத்து பொதுமக்களும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் வனஜாவுக்கு உடன் பணிபுரியும் தலைமை மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மாியாதை செலுத்தி பாராட்டினர்.

இதையும் படிங்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பு..!