நீட் நுழைவு தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும்- மத்திய அரசு

மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மே மாதத்தில் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. எனினும், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி நீதி தேர்வு நடத்தப்பட்டது.