Fishing: மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு துவங்குகிறது

மீன்பிடி தடைக்காலம்
மீன்பிடி தடைக்காலம்

Fishing: தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை பகுதியில், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கில், மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடிதடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்க உள்ளது. திருவள்ளூர், சென்னை, கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய கிழக்கு கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வரை மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வருகிறது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிழக்கு கடற்கரையோர பகுதிகளிலும் இந்த மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.இதனிடையே, மீன்பிடி தடைகால நிவாரணம் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இலங்கைக்கு மேலும் ரூ.15,200 கோடி நிதி வழங்க இந்தியா முடிவு