கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காடு பகுதியை சேர்ந்தவர் அலல். இவரது மனைவி சுருதி. தம்பதிக்கு ஒன்றரை வயதில் ரூத் மரியம் அலல் என்ற குழந்தை உண்டு.
நேற்று குழந்தை ரூத் மரியம், ஒளிந்து விளையாடுவதற்காக வீட்டில் பிரிட்ஜ்க்கு பின்னால் சென்றது.
அப்போது பிரிட்ஜில் இருந்து மின்சாரம் பாய்ந்து குழந்தையை தூக்கி வீசியது. படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தது.



