1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை போலந்து நாட்டில் இருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி படை திருடிச் சென்றது.
தெற்கு போலந்தின் ஸ்லாவெய்சி என்ற இடத்தில் உள்ள தேவாலாயத்தினர் இந்த மணியை இரண்டு ஆண்டுகளாகத் தேடிவந்தனர். அவர்களுக்கு இந்த மணி கிடைத்திருப்பது அதிருஷ்டம்தான்.
ஏனென்றால் ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் செய்வதற்கு ஹிட்லரின் நாஜி படையினர் சுமார் 80 ஆயிரம் தேவாலய மணிகளை உருக்கியதாக ஜெர்மனியின் மன்ஸ்டர் மறைமாவட்டத்தில் உள்ளவர்கள் அவர்களிடம் .
ஆனால், முயற்சிகளுக்குப் பிறகு கடைசியாக அந்த மணி ஜெர்மனியில் உள்ள மன்ஸ்டரில் இருப்பதாக ஒரு தேவாலய மத போதகர் கண்டுபிடித்தார்.
400 கிலோ எடையுள்ள அந்த மணி அந்த பதிவேடு ஒன்றில் பட்டியலிடப்பட்டிருப்பதை மரியன் பெட்நாரெக் என்ற அந்த போதகர் கண்டுபிடித்ததாக அந்த மறைமாவட்டம் தெரிவிக்கிறது.
மன்ஸ்டர் நகரில் உள்ள கத்தோலிக்க கல்லறைத் தோட்டம் ஒன்றில் வேறு இரண்டு மணிகளுடன், இந்த மணியும் கவனிக்கப்படாமல் போடப்பட்டிருந்தது.
போருக்குப் பிறகு, உலோகத்துக்காக உருக்கப்படாத பல மணிகள் திருப்பி அனுப்பப்பட்டன. ஆனால், போலந்து போன்ற கிழக்கு நாடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1,300 மணிகள் ஹேம்பர்கில் உள்ள ஒரு கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் படங்கள் நூரெம்பெர்க் என்ற இடத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
அந்த மணிகளை திருப்பி அனுப்பக் கூடாது என்று பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும், அதற்குப் பதிலாக பழைய மேற்கு ஜெர்மனியில் உள்ள தேவாலயங்களுக்கு அவை இரவலாக அளிக்கப்பட்டதாகவும் மறை மாவட்டத்தினர் கூறுகின்றனர்.



