சசிகலா வரும் ஜனவரி 27ம் தேதி விடுதலை

பெங்களூர் சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகிய சசிகலா 4 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தற்சமயம் ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஏற்கனவே 129 நாட்கள் விசாரணையின்போது சிறையில் இருந்து உள்ளதால் அந்தக் காலத்தை தண்டனையிலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அந்தக் கோரிக்கைக்கு சிறை நிர்வாகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனைத் தொடர்ந்து ராஜாசெந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியது, வரும் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கின்றனர்.

ஆனால் நாங்கள் சசிகலா விடுதலை ஆவதற்கு முன்கூட்டியே சலுகைகளை எதிர்பார்க்கிறோம். நிர்வாகத்திடம் நாங்கள் கேட்டிருக்கிறோம். அதற்கு இதுவரை சிறை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை, என்று கூறினார். சசிகலா விடுதலை ஆவதற்கு இன்னும் 29 நாட்களே உள்ளது. அதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பெங்களூரில் இருந்து சென்னை வரை இருக்கும் சாலைகளில் 65 இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சசிகலா 2016 ஆம் சிறைக்குச் செல்வதற்கு முன் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கு மூன்று முறை கையினால் ஓங்கி அடித்து சபதம் எடுத்து விட்டு சிறைக்கு சென்றார். அதேபோன்று ஜனவரி 27ஆம் தேதி அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும் போது ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மீண்டும் சென்று சபதம் எடுத்துவிட்டு தான் வீட்டிற்கு செல்வார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது சபதம் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சசிகலா மீண்டும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று சபதம் எடுக்க போவது அதிமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.