கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள் – அண்ணாத்த ட்ரைலர் வெளியானது !

சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

மேலும் இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.சமீபத்தில் வெளியான அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரல் காற்றே’, ’மருதாணி’, ‘வா சாமி’ ஆகிய பாடல்களும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகின.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் ரசிகர் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

மேலும் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இதையும் படிங்க : குரூப் போட்டோ எடுத்து கொண்ட தளபதி விஜய் !