தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 49 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் கருபடித்தட்டை காந்தி நகர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் இயக்க நகர செயலர் பிரபு என்பவர் வெற்றி பெற்றுள்ளார்
தற்போது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை வாழ்த்திய நடிகர் விஜய் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளார்.
தற்போது விஜய் பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.இந்த குரூப் புகைப்படத்தில் நடிகர் விஜய் ஓரமாக அமர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !



