பண்டிகை காலங்கள் ஆரம்பித்து விட்டன கடந்த வருடம் கொரோனா தீவிரமாக இருந்ததால் மக்கள் கொண்டாட்டத்தில் அதிக ஆர்வம் செலுத்தவில்லை.
இந்த முறை கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனால் மக்கள் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்கின்றனர்.அந்த வகையில் திரூவாருரில் உள்ள ஜவுளிக்கடையில் வித்தியாசமான குலுக்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் நடத்தி தங்க நாணயம், ஆடு, பட்டுப்புடவைகள் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பண்டிகை காலத்தில் பரிசு அறிவிப்பது வழக்கும்.ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக திருவாரூர் ஜவுளிக்கடை ஒன்றில் பரிசுப்பொருளாக தங்கம், ஆடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது அனைவர் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !



