Tesla baby : டெஸ்லா காரில் பிறந்த குழந்தை !

Tesla baby : டெஸ்லா காரில் பிறந்த குழந்தை
டெஸ்லா காரில் பிறந்த குழந்தை

Tesla baby : அமெரிக்கா பிலடெல்பியாவில் உள்ள ஒரு பெண் தனது மின்சார காரின் முன் இருக்கையில் குழந்தை பெற்றதால் அந்த குழந்தை ’டெஸ்லா பேபி’ என்று அழைக்கப்படுகிறது.

பிலடெல்பியாவில் வசிக்கும் யிரான் ஷெர்ரி கர்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் மற்றும் கணவர் கீட்டிங், 34, மற்றும் மூன்று வயது மகன் டெஸ்லா காரில் பயணிக்கும் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.ஆட்டோ பைலட் மோடில் செயல்படும் போது, காரின் முன்பக்க சீட்டில் அமர்ந்து பயணித்த போது குழந்தை பெற்றுள்ளார்.Tesla baby

கார் போக்குவரத்தில் சிக்கியபோது செல்வி ஷெர்ரி க்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் போகலாம் என்பதை தம்பதியினர் உணர்ந்தனர்.

எனவே கீட்டிங் ஷெர்ரி காரை ஆட்டோ பைலட் மோடுக்கு மாற்றியதோடு, அதனை மருத்துவமனைக்குச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் கார் நுழைந்தவுடன், குழந்தை `மேவ் ஷெர்ரி’ பிறந்துள்ளார். அப்போது மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியைக் காரின் முன் பக்க சீட்டில் வைத்து வெட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : தலைமுடி வளர உச்சந்தலை மீது கூடுதல் அக்கறை தேவை

(Philadelphia woman gives birth in front seat of )