Bone bank at Madurai : மதுரை மாவட்டத்தில் எலும்பு வங்கி துவக்கம் !

Bone bank at madurai : மதுரை மாவட்டத்தில் எலும்பு வங்கி துவக்கம்
மதுரை மாவட்டத்தில் எலும்பு வங்கி துவக்கம்

Bone bank at Madurai : மதுரையில் எலும்பு அறுவை சிகிச்சைகளுக்கு ஏற்றவாறு தானமாகப் பெறப்படும் எலும்புகளைச் சேகரிக்கும் வகையில் புதிதாக எலும்பு வங்கியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

எலும்பு தொடர்பான சிகிச்சைகளுக்கு பாதிக்கப்பட்ட எலும்பை நீக்கி விட்டு புதிய எலும்பு பொருத்தவேண்டும். ஆனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி இல்லாததால், எலும்பு முறிவு ,எலும்பு நோயால் பாதிக்கப்படுபவர்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். Bone bank at madurai

இதனால் செயற்கையாக எலும்பு பொருத்த வேண்டும் என்பது அவசியம் என்பதால், எலும்பு வங்கி அமைக்க சுகாதாரத்துறை முடிவெடுத்தது. அதன்படி தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் மட்டுமே எலும்பு வங்கி உள்ளது.விபத்து காயம் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக எலும்பு வங்கி துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடல் உறுப்புகள் தானம் வழங்குவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதனிடையே, விபத்து மற்றும் எலும்பு சம்பந்தமான புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் தானமாகப் பெறப்படும் எலும்புகளால் பயன்பெற முடியும்.

Tesla baby : டெஸ்லா காரில் பிறந்த குழந்தை !