தாய், மனைவிக்குக் கோயில் கட்டி பால் அபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறைந்த தாய் மற்றும் மனைவிக்குக் கோவில் கட்டிய பணி ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் செயல் பேசு பொருளாக இருந்து வந்தது. இந்த சூழலில் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 101 லிட்டர் பால் அபிஷேகம் செய்து குறிப்பிட்ட ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வழிபாடு நடத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிரிழந்த தனது மனைவிக்குத் தத்ரூபமாகச் சிலை வடித்து தனது மனைவி மீதான ஆழமான காதலை ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த மதன்மோகன். வயது 72. இவர் மனைவி இறந்து 2ஆண்டு ஆகிறது. இவர் கடந்த ஆண்டு தனது மனைவி இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளில் மனைவி மற்றும் தாய்க்கு வீட்டிலே தத்ரூபமாகச் சிலை வடிவமைத்து கோவில் ஒன்றைக் கட்டினார்.

இவரது மனைவி மீனாட்சியம்மாள்(61) கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். கணவன், மனைவியாக இருவரும் 40 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர்.

அவரது நினைவைப்போற்றும் வகையில் மதன்மோகன் வீட்டின் முன்பு கட்டிய கோயிலில் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து சிலைகளுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். மதன்மோகன் மற்றம் அவரது குடும்பத்தினர் திருவுருவ சிலைக்குப் பால் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்து வழிபாடு நடத்தினர்.

இதையும் படிங்க: சமந்தா எடுத்த அதிரடி முடிவு !