என்னது நயன்தாராவுக்கு பதில் அனுஷ்காவா !

தென்னிந்திய நடிகைகளில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நடிகை நயன்தாரா வாங்கியுள்ளார்.அந்த அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் மிலிந்த் ராவ் இயக்கியுள்ள படம் நெற்றிக்கண்.இது டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த படத்தை தயாரித்தவர் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில், நெற்றிக்கண் படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அனுஷ்கா ஷெட்டி நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அனுஷ்கா நடிப்பில் கடைசியாக சைலன்ஸ் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.