வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே ஒவ்வொரு சீசனிலும் ஒரு வெளிநாட்டுப் போட்டியாளரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குள் நுழைக்கிறார்கள். அந்த வகையில், இந்த சீசனில் நாடியா சாங் உள்ளிட்ட சில வெளிநாட்டுத் தமிழர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமினேஷனில் பலர் இருந்த நிலையில், மக்களின் வாக்குகள் அடிப்படையில் ஐக்கி, நாடியா சாங் இருவரும்தான் வெளியேறுவதில் முதல் இரண்டு இடத்தில் இருந்ததாகத் தெரிகிறது. கடைசியில், ஐக்கி காப்பாற்றப்பட்டு நாடியா சாங் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
சீரியல், மாடலிங் என மலேஷியாவில் பரபரப்பாக இருப்பவர் நாடியா சாங். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே ஒவ்வொரு சீசனிலும் ஒரு வெளிநாட்டுப் போட்டியாளரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குள் நுழைக்கிறார்கள். அந்த வகையில், இந்த சீசனில் நாடியா சாங் உள்ளிட்ட சில வெளிநாட்டுத் தமிழர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
”நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆன போதும், டாஸ்க்குகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டாது, குறிப்பாக கன்டென்ட் தராமல் ஒப்புக்கு வந்து போவது போலவே இருக்கிறார்’’ என நாடியா குறித்து கருத்துகள் வெளிவந்து கொண்டிருந்த சூழலில் அவரது எவிக்ஷன் நிகழ்ந்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியிலிருந்து இதுவரை இருவர் வெளியேறியுள்ளனர். எனவே தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். அடுத்து வைல்ட் கார்டு நுழைவாக புதிய போட்டியாளர்கள் யாராவது நிகழ்ச்சிக்குள் செல்வார்களா என்பது அடுத்த சில தினங்களில் தெரிய வரும்.
இதையும் படிங்க: இன்றைய ராசி பலன்



