இவருக்கு பதில் இவரா..சன் டிவி-யில் ரீ எண்ட்ரியான நடிகர் அசீம் !

நடிகர் அசீம் விஜய் டிவி யில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர்,மேலும் மாயா, கடைகுட்டி சிங்கம், பிரியமானவள் மற்றும் தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்துள்ளவர்.

தற்போது சன் டிவி யில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் இருந்து நாயகனாக நடித்த அருண் சமீபத்தில் விலகினார்.அவர் விலகியதற்கு காரணம் கூறவில்லை மேலும் தயாரிப்பாளர் மற்றும் சன் டிவி நிர்வாகம், ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார் அருண்.

தற்போது அருண் விலகியதற்கு பிறகு அசீம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.இவர் நடிக்கும் காட்சிகள் கடந்த 2 நாட்களாக படமாக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.