அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டம் 100 நாட்களில் அமைச்சர் சேகர் பாபு உறுதி !

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் 2006ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

சென்னையில் உள்ள வடபழனியில் முருகன் கோவிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய், சொத்து மதிப்பை தமிழக அரசு மீட்டுள்ளது. கோவில் சார்பாக மீட்கப்பட்ட இடங்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு கூறியிருப்பதாவது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் விரிவுபடுத்துவது குறித்து முக்கிய நடவடிக்கைகளை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் எடுப்பார். இத்திட்டம் 100 நாட்களில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியைச் சார்ந்த மாணவர்களுக்கும், 100 நாட்களில் பணி நியமனம் உறுதி செய்யப்படும்.அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு-வின் முடிவிற்கு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.