ஜூன் 21 முதல் இலவச தடுப்பூசி வழங்க முடிவு:பிரதமர் மோடி !

narendra modi
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்கள் பதித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன.எனினும் கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே மிகசிறந்த வழி என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.அவர் கூறுவது,இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளது.

இதுவரை 23 கோடி டோஸ்களுக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி கொள்கையில் மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்து வருகிறது. இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும். மாநில அரசுகளுக்கு 75 % தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 25 % தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் பெற்றுக் கொள்ளலாம்.

மாநில அரசுகளுக்கு ஜூன் 21ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். கொரோனா தடுப்பூசிகள் குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.