Telangana government: தெலுங்கானாவில் 2020-21 கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில் 2020-21 கல்வியாண்டில் நடைபெற்ற 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 21-ம் தேதி வெளியானது.
இதில் 4,59,242 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில் 2,24,000 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மீதம் 51 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.
இதனால் மனமுடைந்த மாணவர்கள் 6 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் இறங்கின. கொரோனா சூழலை கணக்கில் கொண்டு அரசு முடிவு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தின.
இதையடுத்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
2020-2021 கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும். மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு தேர்வு தான் மிகவும் அவசியமானது. வரும் ஏப்ரல் மாதம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க தோல்வி அடைந்த அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களான 35 மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி வழங்கப்படும்.
வருங்காலத்தில் மாணவர்கள் கடினமாக உழைத்து தேர்ச்சி பெற வேண்டும். அரசின் உதவியை எதிர்பார்க்கக்கூடாது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: Mic Mohan: ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மைக் மோகன்



