Mic Mohan: ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மைக் மோகன்

Actor Mohan
மைக் மோகன்

Mic Mohan: தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார்.

இவர் படங்களில் பாடல்கள் சூப்பர் டூப்பட் ஹிட்டாக அமைந்திருந்தது. பெரும்பாலான படங்கள் மைக் பிடித்து பாடும் கேரக்டராக அமைந்தது. இதனால் இவரை மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார்.

1980- 90-களில் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடம் இருந்தது. அதன்பின் நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அவர் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

தாதா 87 மற்றும் பவுடர் போன்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய படத்தில் மோகன் நாயகனாக நடிக்க உள்ளார். படத்திற்கு சில்வர் ஜுப்ளி ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. பொங்கல் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்க இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: hike in water can price : கேன் வாட்டர் விலை உயர்கிறது !

hike in water can price : புத்தாண்டு முதல் வாட்டர் கேன்களின் விலை குறிப்பிட்ட சில இடங்களில் உயரவுள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸை சேர்ந்த குடிநீர் உற்பத்தியாளர்கள் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், அடைக்கப்பட்ட குடிநீர் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வால், 300 மில்லி, 500 மில்லி, ஒரு லிட்டர், 2 லிட்டர் மற்றும் 5 லிட்டர் பாக்ஸ்களின் மீது புத்தாண்டு முதல் ரூ. 10 உயர்த்தப்படும் என்றும், 20 லிட்டர் கேன் ஃபில்லிங் மீது ரூ. 2 உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.hike in water can price

பெரு நகரங்களில் கேன் பயன்பாடு தவிர்க்க முடியாத நிலையில் ஒன்று. வாட்டர் கேன் தொழிலில் இன்றைக்கு ஏராளமானோர் இறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : Salman Khan gets bitten by snake : பாலிவுட் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது !