TASMAC: மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை

receipt-is-manditory-in-tasmac-shops
மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை

TASMAC: நாளை முழு ஊரடங்கையடுத்து டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதிவரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வார நாட்களில் இரவு ஊரடங்கும் (இரவு 10- காலை 5 மணிவரை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பிற கடைகள் செயல்படாது. பொது போக்குவரத்துக்கு அனுமதியில்லை. வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.

இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே, ஜனவரி 2, 9( முழு ஊரடங்கு) ஜனவரி 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதேபோல், 26ம் தேதி குடியரசுத் தினத்தன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தம்பியை கோடாரியால் வெட்டி கொலை செய்த அண்ணன்