Holiday announcement: நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை!

tasmac
நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை!

Holiday announcement: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக வருகிற 19ஆம் தேதி பொது அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17.2.2022 காலை 10 மணி முதல் 19.2.2022 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22.2.2022 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் மூடியிருக்க உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

அதன்படி, நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு வருகிற 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுகிறது. அதன்பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள வருகிற 22ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

இதையும் படிங்க: Bappi Lahiri: பிரபல இசையமைப்பாளர் காலமானார்