Bappi Lahiri: பிரபல இசையமைப்பாளர் காலமானார்

Bappi Lahiri
பிரபல இசையமைப்பாளர் காலமானார்

Bappi Lahiri:  பாலிவுட் பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹிரி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1985ம் ஆண்டு வெளியான, பாடும் வானம்பாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழகத்திலும் பிரபலமானவர் பப்பி லஹிரி.

இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி 1973-ம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற இந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது அறிமுகத்தை கொடுத்தார். 80 மற்றும் 90 காலகட்டத்தில் டிஸ்கோ இசையை இந்தியாவில் பிரபலப்படுத்திய பெருமை பப்பி லஹிரியை சேரும். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சல்தே சல்தே, டிஸ்கோ டான்சர் மற்றும் ஷராபி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2020 ஆம் ஆண்டு வெளியான பாகி 3 படத்துக்காக பாங்காஸ் என்ற பாடலை பாடி பாலிவுட்டையை மிரட்டி இருந்தார் பப்பி லஹிரி.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் மும்பை க்ரிட்டிகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த லஹிரி, திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், நேற்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமடைந்ததால், அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

லஹிரி கடைசியாக சல்மான் கானுடன் பிக் பாஸ் 15 நிகழ்ச்சியில் தனது பேரன் ஸ்வஸ்திக்குடன் கலந்து கொண்டார். அதுவே அவர் திரையில் தோன்றிய கடைசி நிகழ்ச்சியாகும். பப்பி லஹிரி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Bappi Lahiri passes away

இதையும் படிங்க: Urban local body election: தி.மு.க.வில் மேலும் 18 போட்டி வேட்பாளர்கள் நீக்கம்