அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..!

தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் ‘மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மீனவர் நலன் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை அக்டோபர் 5ம் தேதி தெரிவிக்க வேண்டும். புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள சென்னை மாநகராட்சி, ‘தமிழகத்தில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை மெரினா கடற்கரையில் வரும் 31ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், மெரினாவில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் திறப்பு நவம்பர் 9 ஆம் தேதி திறக்கப்படுகிறது என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது. டெண்டர் திறப்பு குறித்து நவம்பர் 11ஆம் தேதிக்குள் பதிலளிக்கசென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here