தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 70 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 97 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 388 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.