சென்னையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு
தஞ்சையில் கொரோனாவுக்கு இளம்பெண் உயிரிழப்பு

தமிழகத்தில் 24வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்துவருகிறது. 1,70,256 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் 12,770, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 2 பேர் என 12,772 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையிலும் 3வது நாளாக கொரோனா தொற்று 1000க்கும் கீழ் குறைந்துள்ளது.

ஏற்கெனவே 935 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது தொடர்ந்து குறைந்துவருகிறது. ஒரேநாளில் 489 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.