சில தினங்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகம், நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.
தமிழகத்தின் மற்ற அனைத்து கல்லூரிகளிலும் இதே முறையில்தான் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாணவர்கள் ஆன்-லைன் முறையில் செமஸ்டர் தேர்வை நடத்தக்கோரி போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என தமிழக உயர்கல்விதுறை செயலாளர் அதிரடியாக அறிவித்துள்ளார்.



