தமிழ்நாட்டிற்கு ‘4.0’ திட்டம் : இளைஞர்களை மையப்படுத்தி புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது தமிழக அரசு

தமிழ்நாட்டிற்கு '4.0' திட்டம் : இளைஞர்களை மையப்படுத்தி புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது தமிழக அரசு

தமிழகத்தில் நான்காவது தொழில்துறை திட்டத்திற்கு 2,201 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தமிழகத்திற்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் நான்காவது தொழில்துறை திட்டத்திற்கு 2,201 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில்துறை 4.0 திட்டத்திற்கு ரூ.2,201 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழில்துறை 4.0 திட்டம் மூலம் தொழில் பூங்காக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கான புத்தாக்க மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், பொதுவான வசதிகள் போன்றவற்றை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையத்தையும் தலா ரூ. 31 கோடி செலவில் மேம்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்பயிற்சி மையங்களுக்கு தேவையான புதிய உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளியையும் (டெண்டர்) அரசு வெளியிட்டிருக்கிறது.

அதோடு தொழில்துறை 4.0 திட்டத்திற்காக ரூ.2,201 கோடியையும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த புதிய தொழில்துறை திட்டத்தின்படி, தொழில்துறை தேவைக்கு ஏற்ப தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை தயார்படுத்துதல், வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான படிப்புகளையும் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் உள்ளூர் மற்றும் உலகளாவிய தொழில்துறையின் தேவைக்கேற்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு சூழலை ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் உள்ளூர் மற்றும் உலகளாவிய தொழில்துறையின் தேவைக்கேற்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு சூழலை ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.

இதையும் படிங்க: Ration Card: தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!