ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா !

கரோனா தொற்று எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்ததையடுத்து ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.

இதற்கு தமிழக அரசு ஏதிர்ப்பு தெரிவித்துள்ளது.மேலும் பலமுறை விதிகளை மீறியதாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மீண்டும் திறக்க அனுமதி கேட்பதை தமிழக அரசு விரும்பவில்லை.மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.