ஒற்றை தலைவலியா கவலை வேண்டாம் இதோ சில உடனடி நிவாரணம் !

பொதுவாக தலைவலிகள் பல வகை உண்டு.முன்பக்க வலி, பின் மண்டை வலி, இரண்டு பக்தலைவலியில் தொல்லை தருவது மைக்ரேன் தலைவலி எனப்படும் ஒற்றை தலைவலி தான்.

இந்த தலைவலி வந்தால் சிலருக்கு காலை முதல் மாலை வரை இந்த வலி உணர்வு நீடிக்கும். இன்னும் சிலருக்கு 24 மணி நேரம் வரையும் நீடிக்கும்.

சிலருக்கு வெயிலில் சென்றால் தலைவலி வரும்,சிலருக்கு குளிரால் வரலாம்.பரம்பரை வழியாக இந்த தலைவலி உண்டாக லாம்.சிலருக்கு வேலை பார்க்கும் நேரம் வரை இந்த டென்ஷன் மைக்ரேன் தலைவலி வருவ துண்டு.

இதற்கு நாம் சில வீட்டு வைத்தியம் செய்து பார்க்கலாம்.அதிக வலி இருக்கு என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.தினமும் 8 மணிநேர தூக்கம் முக்கியம்.சரியான தூக்கம் இல்லையென்றால் கூட இந்த ஒற்றை தலைவலி வரலாம்.

மைக்ரேன் தலைவலி இருப்பவர்கள் அதிகப்படியான சாக்லெட், சீஸ், அதிக அளவு காஃபி, அதிக வாழைப்பழம் போன்றவை கூட இந்த தலைவலியை உண்டாக்கிவிடும்.

மேலும் நேரடியாக வெளியில் செல்லுவதை தவிர்க்கவும்.ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தலைவலியை பெருமளவு குறைக்க முடியும்.திக தலைவலி இருக்கும் நேரத்தில் உடற்பயிற்சி தேவையில்லை.டிவி பார்ப்பது,மொபைல் பயன்படுத்துவை தவிர்க்கவும்.மேலும் அதிகப்படியான வெளிச்சத்தை தவிர்க்கவும்.