இனி உங்கள் வீட்டுக்கே வரும் பழனி பஞ்சாமிர்தம்..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் பஞ்சாமிர்தம் மற்றும் தண்டாயுதபாணி சுவாமியின் ராஜ அலங்கார புகைப்படம் மற்றும் விபூதி பிரசாதம் ஆகியவற்றை தபால் மூலம் பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் கோவிலுக்கு வருமானம் உயர வாய்ப்புள்ளதுடன், வெளிமாநிலத்தவர்கள் மற்றும் கோவிலுக்கு நேரில் வர இயலாத சூழ்நிலையில் உள்ள பக்தர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. இதனை பரிசீலித்த தமிழக அரசு தபால் மூலம் அரை கிலோ டின் பழனி பஞ்சாமிர்தம், தண்டாயுதபாணி சுவாமியின் ராஜ அலங்கார லேமினேட்டட் புகைப்படம் மற்றும் இயற்கையாக கோவில் சார்பில் தயாரிக்கப்படும் 10 கிராம் விபூதி ஆகியவை ரூ.250 கட்டணத்தில் பக்தர்களின் வீடுகளுக்கே செல்லும் நடைமுறைக்கு வர அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. 

இதில் பிராசத கட்டணம் ரூ.70-ம், தபால் செலவு ரூ.180 அடங்கும்.