தமிழகத்தில் நடைபெறும் தொல்லியல் ஆய்வுக்கு ரூ..5 கோடி நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர்

2020-21ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆக.,13) தாக்கல் செய்தார். முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்:

1 பொது வினியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்

2 2.05 லட்சம் ஹெக்டேருக்கு அதிகமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது

3 அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்

4 அரசு நிதி சார்ந்த வழக்குகளை கையாள ‛வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு’ உருவாக்கப்படும்.

5 ஒவ்வொரு ஆண்டும் ‛ஜூன் 3ம் தேதி’ கலைஞர் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும், ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

6 செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்திகீழ் தமிழ்ப் படைப்புகள் மொழிப்பெயர்க்கப்படும்.

7 தமிழகத்தில் நடைபெறும் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ..5 கோடி நிதி ஒதுக்கப்படும்.