காபூல் நகருக்குள் நுழைந்த தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான ஜலாலாபாத்தை இன்று தலிபான் தீவிரவாதிகள் கைபற்றினர்.

ஜலாலாபாத்தில் இப்போது எந்த மோதல்களும் நடக்கவில்லை, ஆளுநர் தலிபான்களிடம் சரணடைந்தார் என்று கூறப்படுகிறது.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

மொத்தம் 34 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.தற்போது ,தலைநகர் காபூலை தலிபான்கள் கால்பதித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடையவைக்கிறது. தலிபான்கள் தற்போது காபுலின் எல்லையில் குவிக்கப்பட்டு வருவதாகவும் 2 மணி நேரத்தில் காபூலை கைப்பற்றுவோம் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.