ஆப்கானிஸ்தான் புதிய பிரதமர் முல்லா முகமது ஹசன் !

வரலாற்றில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது அதில் ஒன்று தான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள்.மேலும் இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்பு தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. மேலும் இவர்களது ஆட்சி எப்படி இருக்கும் என்று என்ற கேள்வியும் எழுந்துள்ளது.தற்போது ஆப்கானிஸ்தான் பிரதமராக முல்லா முகமது ஹசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டார்.அதில் ஆப்கானிஸ்தானின் பிரதமராக முல்லா முகமது ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை பிரதமராக முல்லா பராதர் செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.