பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்த உள்ளோம்- தலிபான்கள்

Women with their children try to get inside Hamid Karzai International Airport in Kabul, Afghanistan August 16, 2021. REUTERS/Stringer NO RESALES. NO ARCHIVES

பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்’ என, தலிபான்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா தெரிவித்துள்ளார்.

தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்து உள்ளதாவது:நாங்கள் இஸ்லாம் மற்றும் அனைத்து ஆப்கன் மக்களுக்கான அரசை நிறுவ நினைக்கிறோம்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மதம் என்று வரும்போது நாங்கள் பாரம்பரியமாக இணைந்திருக்கிறோம்; இரு நாட்டு மக்களும் ஒருவருக்கொருவர் கலக்கிறார்கள். எனவே பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் எதிர் நோக்கியுள்ளோம்.

ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதில் பாகிஸ்தானுக்கு எந்த பங்கும் இல்லை. இந்தியாவுடன் நாங்கள் நல்ல நட்புறவை பேண விரும்புகிறோம். பிற நாடுகளுக்கு எதிராக ஆப்கன் மண்ணைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.