விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா- மோடி பங்கேற்பு

நோபல் பரிசு பெற்ற வங்கக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் தோற்றுவித்த விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ‘இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றிய விஷ்வ பாரதி பல்கலைக்கழகம், உலக சகோதரத்துவத்தின் முக்கியக் பங்காற்றியது.

இந்தியா சுயசார்பை உறுதிசெய்ய வேண்டும் என தாகூர் கனவு கண்டிருந்தார். அவரின் கனவை நிறைவேற்றும் விதமாக தற்சார்பு இந்தியாவை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு விஷ்வ பாரதி முக்கியப் பங்காற்றுகிறது. இந்திய பொருள்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த புதிய வழிகளை விஷ்வ பாரதி மாணவர்கள் கண்டறிந்து நாட்டிற்கு பங்காற்ற வேண்டும்.

ரவீந்திரநாத் தாகூரின் வழிநின்று இந்தியாவின் வளர்ச்சியை உறுதிசெய்து அதன்மூலம் உலக மேம்பாட்டை நாம் நிறுவ வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.