சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக உயர்வுடன் வர்த்தகமான நிலையில் இன்று(அக்.,14) சரிவை சந்தித்தன.


இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 214 புள்ளிகள் சரிந்து 40,410.57ஆகவும், நிப்டி 77.05 புள்ளிகள் சரிந்து 11,857.45ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து காலை 11.15மணியளவில் சென்செக்ஸ் 300, நிப்டி 100 புள்ளிகளுக்கு அதிகமாகவும் சரிந்து வர்த்தகத்தை தொடர்ந்தன.

ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும், முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.