மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு உயர்ந்து லாபநோக்குடன் காணப்பட்டது. அதன் மதிப்பு, காலை 9.46 மணியளவில் 278.49 புள்ளிகள் உயர்ந்து 60,965.18 புள்ளிகளாக உள்ளது.
இவற்றில், சுகாதாரம், எண்ணெய் மற்றும் வாயு துறைகள் அதிக லாபத்துடன் காணப்பட்டன. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு, காலை 9.46 மணியளவில் 18,190.70 புள்ளிகள் உயர்ந்து 87.90 புள்ளிகளாக உள்ளது.



