கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவத்திலோ எடுத்துக் கொள்ளலாம். எப்படி எடுத்துக் கொண்டாலும், அதனால் கிடைக்கும் நன்மைகள் ஒன்று தான். ஆனால் அதில் ஒரு வேறுபாடு உள்ளது.

அது என்னவெனில் ஒரு கப் கேரட் ஜூஸின் எடை 236 கிராம் வரும். அதாவது மூன்று பெரிய கேரட் ஆகும். ஒரே நேரத்தில் மூன்று பெரிய கேரட்டுகளை யாராலும் சாப்பிட முடியாது. ஆனால் ஒரு கப் கேரட் ஜூஸை ஒரே நேரத்தில் குடிக்க முடியும். இதனால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும்.

தற்போது கணினி முன்பு வேலைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி மொபைலை அதிக நேரம் உற்றுப் பார்ப்பதன் மூலமும் பார்வை கோளாறு விரைவில் ஏற்படும். எனவே இத்தகையவற்றை தவிர்க்க தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடீன், பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுத்து, நல்ல பாதுகாப்பு வழங்கும்.