மும்பை பங்குச் சந்தையை (பிஎஸ்இ) பொருத்தமட்டில் வர்த்தகத்தின் தொடக்கத்தில் குறியீட்டெண் 112.74 புள்ளிகள் (0.23 சதவீதம்) குறைந்து 48,064.06 ஆகவும், தேசிய பங்கு சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 38.25 புள்ளிகள் (0.27 சதவீதம்) சரிந்து 14,094.65 ஆகவும் வர்த்தகமானது.
அதிகப்படியாக ஓ.என்.ஜி.சி நிறுவன பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்தது. அதேபோல் எம் அண்ட் எம், என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை தொடர்ந்து சரிவில் வர்த்தகமாகின்றன.
ஆசியாவின் பிற சந்தைகளில், ஷாங்காய், டோக்கியோ மற்றும் ஹாங்காங்கில் உள்ள வர்த்தக நிறுவன பங்குகளும் சரிவில் வர்த்தகமாகின. அதே நேரத்தில் சியோல் பங்குச் சந்தைகள் ஏறுமுகத்தில் காணப்படுகிறது.