ஏடிஎம்-மில் பணம் எடுக்க புதிய மாற்றம் அறிவிப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏற்கனவே ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது தொடர்பான விதிகளில் ஓடிபி (OTP) அம்சத்தை கொண்டுவந்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP- சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனைகளை SBI அறிமுகப்படுத்தியது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஓடிபி (SBI OTP) விதிகளை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ரூ .10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் திரும்பப் பெறலாம். அதாவது இனிமேல் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் அந்த OTP எண் அனுப்பப்படும்.

ஜனவரி மாதத்தில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை வங்கி இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அனுமதித்திருந்தது. தற்போது அதை முழுநேரமாக மாற்றியுள்ளது. செப்டம்பர் 18 முதல், எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து பணம் பெறுவதற்கான நேரத்தை நீட்டிப்பதாக வங்கி அறிவித்தது.

இது குறித்து எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில், “வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, எஸ்பிஐ ஏடிஎம்களில் ரூ. 10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்கான காலத்தை எஸ்.டி.பி வங்கி 24×7 ஆக நீட்டித்துள்ளது. எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யுங்கள்!” என்று எஸ்பிஐ ட்வீட் செய்துள்ளது.