கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்
நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்

கலைவாணர் அரங்கத்தில் இன்று தமிழக சட்டசபை கூடியது. அப்போது, கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு வெளியே எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* கொடநாடு கொலை வழக்கில் அரசியல் ரீதியிலான எந்த தலையீடும் இல்லை.

கொடநாடு கொலை வழக்கில் தி.மு.க அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

* கொடநாடு வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்.

* தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.

* சட்டசபை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.