தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்..!

சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் (11/11/2020 முதல் 13/11/2020 வரை)

  1. மாதவரம் புதிய பேருந்து நிலையம்

செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்.

  1. கே.கே. நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம்

ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

  1. தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்)

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

3.அ. தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

  1. பூந்தமல்லி பேருந்து நிலையம்:
    வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.
  2. கோயம்பேடு பேருந்து நிலையம்:

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர, இதர ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம் மற்றும் கோயம்புத்தூர்)

2020 – தீபாவளிக்கு முன்பு – நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை

11.11.2020 (புதன்கிழமை)

வழக்கமான பேருந்துகள் 2,000. சென்னையிலிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை 225. மற்ற இடங்களிலிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை 900.

12.11.2020 (வியாழக்கிழமை)

வழக்கமான பேருந்துகள் 2,000. சென்னையிலிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை 1,705. மற்ற இடங்களிலிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை 1,807.

13.11.2020 (வெள்ளிக்கிழமை)

வழக்கமான பேருந்துகள் 2,000. சென்னையிலிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை 1,580. மற்ற இடங்களிலிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை 2,540.

மொத்தம் வழக்கமான பேருந்துகள் 6,000. சென்னையிலிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை 3,510. மற்ற இடங்களிலிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை 5,247.

மொத்தம் 3 நாட்களில் இயக்கப்படும் வழக்கமான பேருந்துகள் 6,000. சிறப்புப் பேருந்துகள் 8,757. ஆக மொத்தம் 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.